tamilnadu

img

சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்பது பொருத்தமான முழக்கம் அல்ல... எல்லைப் பிரச்சனையை மேலும் பெரிதாக்கிவிடக் கூடாது!

புதுதில்லி:
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீனப் படைகள் இடையிலான மோதல் தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு, முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவுக்கு மத்திய அரசுஅழைப்பு விடுக்காததால், அவர் கூட்டத்தில்பங்கேற்கவில்லை. எனினும், அந்த கூட்டத்திற்கு முன்னதாகவே, சீன விவகாரத்தை, மத்திய அரசும் - எதிர்க்கட்சி
களும் எவ்வாறு அணுக வேண்டும் என்பதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:

“கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினருக்கு இடையேநடந்த மோதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடம் பேசி ஆலோசிக்க பிரதமர் மோடி அனைத்துக் கூட்டத்தைக் கூட்டியதை நான் வரவேற்கிறேன். தேச நலனுக்காகவும், விவாதங்களுக்கும் பல கட்சிசூழலை உறுதிப்படுத்தியுள்ளதால் சில பரிந்துரைகளை, ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன்.இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் எதிர்க்கட்சிகள் தங்கள் நிலைமறந்து அமைதியற்ற முறையில், கட்டுப்பாடற்ற முறையில்பேசிவிடக்கூடாது. கூட்டுறவுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள் ளது. உள்நாட்டு அரசியலையும், தேசப் பாதுகாப்பையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக்கூடாது.

இதன் அர்த்தம் எதிர்க்கட்சிகள் யாரும்ஆளும் அரசைக் கேள்வி கேட்காதீர்கள் என்று அர்த்தம் அல்ல. மிகப்பெரிய பங்களிப்பு நமக்கு இருப்பதை மனதில் வைத்துச்செயல்பட வேண்டும்.இந்திய - சீன எல்லை விவகாரத்தில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து தேசியவாதம் என்பது உயர்ந்த குரலில் ஒலிக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக, நாட்டில் சீனாவுக்கு எதிரான குரல் வலுத்து வருகிறது. சீனாவைப்பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷம் முன்னெடுக்கப் படுகிறது. ஆனால், சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷம் எழுவது சரியானது கிடையாது. அந்த கோஷத்தை மத்திய அரசு ஆதரிக்கக்கூடாது. அவ்வாறுஆதரித்து ஊக்கப்படுத்தினால், அதன் தாக்கம் மிகவும் ஆழமாக இருக்கும். நடைமுறைக்கு ஏற்ற வழியில், யதார்த்தத்தின் வழியில்தான் நாம் நடக்க வேண்டும்.குறிப்பாக இந்திய - சீன எல்லை விவகாரத்தில் தேசியவாதத்தின் குரலை குறைத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால், இந்த விவகாரத்தை மேலும் நாம் பெரிதாக்கிவிடக்கூடாது. ஆத்திரத்தையும், கோபத்தையும், பழிவாங்கும் உணர்வையும் தூண்டுவது போல் பேச இந்த நேரம் உகந்தது அல்ல.

ஊடகங்களில் சில உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்புகிறார்கள், விளம்பரங்களைத் தேடுகிறார்கள். கடந்த1996-ம் ஆண்டு பிரதமராக நான் இருந்தபோது, சீனாவுடன் செய்த ஒப்பந்தத்தில் வீரர்கள் சுயக் கட்டுப்பாட்டைக் கடைப் பிடிக்கவும், ஏதாவது சிறிய மோதல் ஏற்பட்டாலும் உடனடியாக ஆலோசனை நடத்தவும் வலியுறுத்தப்பட்டது.ஆனால், தற்போது சமூக ஊடகங்களில்உண்மைக்கு மாறான பல தகவல்கள் வருவது வேதனையளிக்கிறது. அதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.அதாவது பிரதானமான எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், செய்திகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் கூறவில்லை.எல்லையில் சீன - இந்திய ராணுவத்துக்கு இடையே என்ன நடந்தது, களச்சூழல்என்ன, இரு தரப்பு பேச்சுவார்த்தை நிலைஎன்ன? என்பது குறித்து ராணுவத்தின் மூத்த அதிகாரிகள், நிர்வாக ரீதியில் ஒருஅதிகாரி ஆகியோர் விரிவான அறிக்கையைத் தயாரித்து எதிர்க்கட்சிகளுக்கு வழங்கிட வேண்டும்.

இந்த அறிக்கை இருந்தால் மட்டும்தான், அரசுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடையே கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது அர்த்தமுள்ள வகையில் இருக்கும். தகவல்களை வகைப்படுத்த இந்தக் கோரிக்கை வைக்கவில்லை. உண்மைத் தகவல்களுக்காக மட்டுமே இதுவைக்கப்படுகிறது.இந்தியாவைச் சுற்றி பகை நாடுகள் உள்ளதாக ஒரு உணர்வு எழும்போது, அரசியல் தலைவரின் முக்கியமான கடமை என்பது, அந்த அச்ச உணர்வை சரியான தகவல்கள் மூலம் போக்குவதாகும். எல்லாநேரங்களிலும் தேசத்துக்குச் சில தகவல்களைத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

தேசம் தொடர்பான சில தகவல்களைமூடிமறைப்பது, சில விஷயங்களில் தகவல்களை மிகைப்படுத்தி கூறுவது நமது நாட்டின் நீண்ட கால நலனுக்கு மோசமான செயல் திட்டமாக அமைந்துவிடும். சமீபகாலமாக ராணுவத்தை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்த முயற்சி நடக்கிறது.இது மிக ஆபத்தானது. ராணுவத்தை, ராணுவ வழியில் செயல்பட விட வேண்டும். அவர்களை தேசப்பணியாற்றும் செயலுக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், அரசுக்கு அவர்கள் பயமின்றியும், சரியான முறையிலும் அறிவுரை வழங்குவார்கள்.எல்லையில் இந்திய வீரர்கள் எவ்வாறுகொல்லப்பட்டார்கள் என்பது குறித்து விசாரித்து சரியான தகவல்ளையும், உண்மையில் என்ன நடந்தது என்பதையும் தெரிவிப்பது அவசியம்’’.இவ்வாறு தேவகவுடா தெரிவித் துள்ளார்.