“முதலாளித்துவம் நேரடியாக நரகத்து க்குத்தான் இட்டுச்செல்கிறது. முதலாளித்துவம் அழிவுப் பூர்வமானது; சோசலிசம் ஆக்கப்பூர்வமானது.” இது ஹியூகோ சாவேசின் வார்த்தைகள். 28.07.2020 சாவேசின் பிறந்த நாள். கொரோனா காலத்தில் இது மிகவும் பொருத்தமான வார்த்தைகள். முதலாளித்து வத்தின் திவால் நிலையும் சோசலிசத்தின் மேன்மையும் சிந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் தெளிவாக புரியும்.
அஷோக் தவாலே, சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்
----------------------------
இந்தியாவின் மக்கள் தொகையில் 14% மட்டுமே இருந்தாலும் கார்ப்பரேட் உயர் பதவிகளில் 94% உயர்சாதியினர் வசம்தான் உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 2% மற்றும் தலித்/ ஆதிவாசி பிரிவினர் 0.01% மட்டுமே உள்ளனர்.
சீமா சிஷ்டி, பத்திரிகையாளர்
--------------------
தற்போதைய வருமான பகிர்வு அடிப்படையில் ஜி.எஸ்.டி.யில் மாநிலங்களின் பங்கை தர இயல வில்லை என நாடாளுமன்ற குழுவில் நிதி அமைச்சக செயலாளர் கூறியுள்ளார். குறிப்பிட்ட அளவுக்கு கீழே ஜி.எஸ்.டி வருமானம் சரிந்தால் வருமான பகிர்வு விகிதாச்சாரத்தை மத்திய அரசுக்கு சாதகமாக மாற்ற ுடியும் எனவும் நிதி அமைச்சக செயலாளர் கூறுகிறார். அப்படியானால் மாநிலங் களின் கதி! அதிர்ச்சி தருவ தாக உள்ளது.
ரோகினி சிங், பத்திரிகையாளர்
------------------
ராஜஸ்தான் முதல்வர்அசோக்கெலாட்டின்சகோதரருக்கு அமலாக்கத் துறை சம்மன். ராஜஸ்தான் அரசாங்கத்தை கவிழ்க்க அமித்ஷாவுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை; அமலாக்கதுறை கையில் உள்ளது.
சுவாதி சதுர்வேதி, பத்திரிகையாளர்
--------------------
மோடி அரசாங்கத் தின் அமைச்சர் (புகைப்படத்தில் உள்ள கஜேந்திரசிங்/ சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசியவர்) ராஜஸ்தான் கூட்டுறவு வங்கியிலிருந்து முதலீட் டாளர்களை ஏமாற்றி 900 கோடி ரூபாய் தனது பெயரில் எத்தியோப்பியா போன்ற தேசங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளார். இந்த அமைச்சர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப் பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
எம்.கே.வேணு, பத்திரிகையாளர்
-----------------
5 மாதங்களில் 12வது முறையாக அலகாபாத் உயர்நீதிமன்றம், மனிதநேய மருத்துவர் கபீல்கானின் வழக்கை விசாரிக்க மறுப்பு. கபீல்கான் அலிகார் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியதற்காக பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசியல் சட்ட பிரிவு 21 குறித்த நீதித்துறையின் பாராமுகம் அதிர்ச்சி தருகிறது.
பிரசாந்த் பூஷண், மூத்த வழக்கறிஞர்
$$$$$$$$$$$$$$
அ.அன்வர் உசேன்