politics

img

கம்யூனிஸமும் பெரியாரும்

"கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமைதிக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதனமாகும்"

"தொழிலாளர்கள் சேர்ந்து உருவாக்கும் சோஷலிஸ அரசினால் மட்டும்தான் சாதிக்க முடியும்”

*சோஷலிஸத்தைத் தென்னிந்தியாவில் முதன்முதலாகப் பிரச்சாரம் செய்த திராவிட இயக்கத்தின் தலைவர் பெரியார்.

*சமூகநீதிக்காக அவர் தொடங்கிய பணிகளில் ஒரு சகாவாக கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான எம்.சிங்காரவேலுவை ஏற்றுக்கொண்டார். சமூகநீதி, சுயமரியாதை ஆகிய கொள்கைகளை மக்களிடையே பரப்ப அவர் தொடங்கிய ‘குடி அரசு’ இதழில் பல கட்டுரைகளை எழுதினார் சிங்காரவேலர்.

*1931 அக்டோபர் 4-ம் தேதி இதழில் கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றிய அறிமுகக் கட்டுரை ‘குடிஅர’சில் வெளியானது. மேலும், கம்யூனிஸ்ட் அறிக்கை ப.ஜீவானந்தத்தால் மொழிபெயர்க்கப்பட்டு தொடராக வெளியானது.

*1972-ல் ‘உண்மை’ என்ற பத்திரிகையில் சோவியத் யூனியனில் சோஷலிஸம் சாதித்தவற்றை நினைவுகூர்ந்திருந்தார்

*“அங்கு பிள்ளைகளைத் தாய் தந்தைதான் காப்பாற்றவேண்டும், வளர்க்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அரசாங்கமே ஏற்று வளர்த்துக்கொள்கின்றது. இங்கு நம்மவர்கள் ‘எதற்கடா குழந்தை?’ என்றால் ‘செத்த பிறகு கொள்ளிவைக்க, ஈமக்கடன் செய்ய’ என்கின்றான்; மற்றும் ‘அந்திமக் காலத்தில் எங்களைக் காப்பாற்ற, கஞ்சி ஊற்ற அவசியம் குழந்தை வேண்டும்’ என்கின்றான்; ‘என் சொத்துக்கு வாரிசாக வேண்டும்’ என்கின்றான்.”

*“தோழர்களே! பொதுவுடைமை நாட்டில் கடவுளோ, மதமோ, சாஸ்திர நம்பிக்கையோ இல்லை. அங்கு உயர்ந்தவன், தாழ்ந்தவன்; உயர்ந்த உத்தியோகஸ்தன், தாழ்ந்த உத்தியோகஸ்தன் என்கின்ற நிலையுமில்லை. எல்லோரும் சமமானவர்கள்; எல்லோருக்கும் சம்பளம் (வாழ்க்கை வசதி) ஒன்றுதான் - வேலைதான் வேறு வேறு. அங்கு பெரிய வேலையை ஒத்துக்கொண்டால் பொறுப்புகள் அதிகம் என்று கருதுவான். எனவே, அங்கு மேல் கீழ் என்று பாராட்டப்படுவதேயில்லை. இதனால் அங்கே உற்பத்தி பெருகுகின்றது.”
“அங்கு ஒரு ஆள் இத்தனை மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டுமென்றும், இவ்வளவு வேலை செய்தாக வேண்டுமென்றும் உள்ளது. ‘டைம்’ முடிந்தால் நம் நாட்டுத் தொழிலாளர்கள் போல அவர்கள் ஓட மாட்டார்கள்; அதிகப்படியாகக் கொஞ்சநேரம் வேலை, அவனாக முன்வந்து செய்வான். இப்படிச் செய்கின்றவர்களின் வேலைகளையும் நேரத்தையும் கணக்கிட்டு, வருஷமோ, மாதமோ ஆன பிறகு அவர்களுக்குப் பட்டம் கொடுத்து மரியாதை பண்ணுவார்கள். தோழர்களே! அங்கு இந்த மரியாதையினைத்தான் எதிர்பார்ப்பானேயொழிய அதிகப்படி பணத்தை எதிர்பார்க்கவே மாட்டான். அங்கு புரட்டோ, திருட்டோ ஏமாற்றுவதோ அடியோடு கிடையாது.”

*பெரியாரும் சிங்காரவேலரும் சுயமரியாதை இயக்கத்துக்காகப் புதிய திட்டத்தை வகுத்தனர். ராமநாதன் உள்ளிட்ட சில தலைவர்கள் கடுமையாக எதிர்த்தும் ஈரோட்டில் நடந்த மாநாட்டில் அது ஏற்கப்பட்டது. ‘ஈரோட்டுத் திட்டம்’ என்று அழைக்கப்பட்ட இந்தத் திட்டம், பிரிட்டிஷாரிடமிருந்தும் இதர வகை முதலாளித்துவ அரசுகளிடமிருந்தும் முழுச் சுதந்திரம் கோரியது

*தேசியக் கடன் தள்ளுபடி, அனைத்து விவசாய நிலங்களையும் வன நிலங்களையும் பொதுவுடமையாக்குவது, நீர்நிலைகள், ரயில் துறை, வங்கிகள், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துவகை போக்குவரத்து ஆகியவற்றையும் அரசுடைமையாக்க வேண்டும்; தொழிலாளர்கள், விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்ய வேண்டும், தொழிலாளர்களும் விவசாயிகளும் தலைமை தாங்கி நடத்தும் அரசுக் கூட்டமைப்பில் அனைத்து சுதேச சமஸ்தானங்களையும் இணைக்க வேண்டும் என்பவை கோரிக்கைகள்.
அந்தத் திட்டங்களை மாநாடு ஏற்றுக்கொண்டது சுய மரியாதை இயக்கத்தின் அரசியல் பிரிவால் வெளியிடப்பட்டதன் மூலம் தென்னிந்தியாவின் சமதர்மக் கட்சி உதயமாகிவிட்டது. 1933 ஏப்ரலில் திருப்பூரில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் புதிய அரசியல் முறைமை குறித்து பெரியார் விளக்கிப் பேசினார்.

*“இந்த இயக்கமானது இத்தனைக் காலமாக இந்து மதம் குறித்தும் பிராமணர்களின் தந்திரம் குறித்தும்தான் பேசிவந்திருக்கிறது; பிராமணர் அல்லாத சமூகத்தவரின் பொருளாதார, அரசியல் நலன்கள் குறித்து கவனம் செலுத்தியதே இல்லை. அவர்களுடைய பொருளாதார நிலையை உயர்த்துவதன் மூலம்தான் அவர்களை முன்னேற்ற முடியுமே தவிர, பிராமணர்களின் அர்த்தமற்ற சடங்குகளை எதிர்ப்பதால் மட்டுமே முன்னேற்றிவிட முடியாது. முதலாளிகள் ஆதிக்கம் செலுத்தும் இப்போதைய அரசு முறைமை மூலம் பிராமணர் அல்லாதவர்களின் பொருளாதார நலன்களை மேம்படுத்திவிட முடியாது, தொழிலாளர்கள் சேர்ந்து உருவாக்கும் சோஷலிஸ அரசினால் மட்டும்தான் அதைச் சாதிக்க முடியும்” என்று பெரியார் பேசினார்

*விஸ்வநாதன். புரட்சி, பகுத்தறிவு, சமதர்மம், வெடிகுண்டு என்ற பெயர்களில் வாரப் பத்திரிகைகளையும் கொண்டுவந்தார்.

*மே தினத்தன்று பொதுக் கூட்டங்களை நடத்தினார். சுமார் 50 மே தினப் பொதுக்கூட்டங்களில் பெரியார் கலந்துகொண்டார். 

*தமிழக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், தனியுடைமையைக் கண்டித்தும், சோவியத் பாணி அரசை அமைக்க வேண்டியதை வலியுறுத்தியும் பேசினார்.

*சோஷலிஸ உலகை விரிவுபடுத்துவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது; (இந்திய) அரசாங்கத்தைத் தூக்கி எறிவது அவசியம் என்று அவர் ‘குடிஅர’சில் தலையங்கம் எழுதியதும், அரசு செயல்பட்டது. அரசுக்கு எதிராகக் கலகத்தைத் தூண்டுவதாகக் குற்றம்சாட்டி 9 மாதங்கள் சிறைத் தண்டனையையும் ரூ.3,000 அபராதத்தையும் விதித்தது.

#கம்யூனிசம்வரத்தான்செய்யும். ❤📚✍

கம்யூனிஸ்டுகளின் இன்றையக் கிளர்ச்சி நடைபெற்று வந்தாலும், நடைபெறாவிட்டாலும் இந்த நாட்டிற்கும் கம்யூனிசம் வரத்தான் செய்யும்.

 ஏன்?
 கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமைதிக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதனமாகும் என்ற அறிவு, – அதுவே சத்தியமானது, அதுவே உண்மையானது என்ற அறிவு எல்லா நாடுகளிலும் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்திருக்கிறது. அந்த சுவாலை இன்றில்லையானாலும் நாளை இந்நாட்டையும் கவ்வத் தான் போகிறது. ஆங்கிலேயரின் தந்திரமோ, அமெரிக்கரின் அணு குண்டோ கம்யூனிசத்தின் பரவலை இனியும் தடை செய்து கொண்டிருக்க முடியாது.

(பம்பாயில், 12-2-1950-இல் சொற்பொழிவு, ‘விடுதலை’, 22-2-1950)

#வரலாறு
#கம்யூனிஸ்ட்