புதுதில்லி:
பாஜக என்பது, மோடி - அமித்ஷாவின் கட்சி அல்ல என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆவேசப்பட்டுள்ளார். பாஜக, மோடியை மையமாக வைத்து இயங்குவதாக கூறப்படுகிறது. அது தவறு. பாஜக தனிப்பட்ட நபரை மையமாக வைத்து இயங்கியதில்லை. கடந்த காலத்தில், வாஜ்பாய், அத்வானியின் கட்சியாகவும் பாஜக இருந்ததில்லை. அனைத்து முடிவுகளையும் கட்சியின் நாடாளுமன்றக் குழுதான் எடுக்கிறது என்றும் கட்காரி காட்டமாக கூறியுள்ளார்.