tamilnadu

img

புல்டோசர் ஏற்றத் தயங்கமாட்டேன் : அதிகாரிகளை மிரட்டிய நிதின் கட்காரி

புதுதில்லி, அக். 2- “நான் நக்சல் ஆதரவாளராக எனது அரசியல் பயணத்தை துவக்கினேன். அதன்பிறகு பாஜகவில் சேர்ந்தேன். எனது பழைய நிலைப்பாட்டுக்கு சென்றால் குழப்பம் ஏற்படுத்துவோர் மீது புல்டோசரை  ஏற்ற தயங்கமாட்டேன்” - இப்படிக் கூறியவர் மத்திய சாலைப்  போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி. கேரளத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெறாததற்கு தனது அமைச்சர வை ஊழியர்கள்தான் காரணம் எனக் காட்டுவதற்காக இந்த வார்த்தைகளை வெளிப்படையாக பயன்படுத்தியுள்ளார்.  கேரள முதல்வர் தன்னை இதுதொடர்பாக தற்போது நான்காவது முறையாக சந்தித்தார் எனவும், அவரது முகத்தில் விழிக்கவே தயக்கமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.  நிலம் கையகப்படுத்தல் செலவில் 25 சதவிகிதத்தை ஏற்க தயார் என கேரள அரசு கடந்த ஜுலை மாதம் கூறி யிருந்தது. இப்போது இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. எதனால் இந்த காலதாமதம்? விரைவாக கேரள அரசுட னான ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டும். வளர்ச்சி தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளில் அரசியல் கூடாது. கோப்புகள் விரைவாக நகர்த்தப்பட வேண்டும். அதில் பலவீனம் ஏற்பட்டால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்காரி கூறினார்.  சாலை போக்குவரத்து செயலர் சஞ்சீவ் ரஞ்சன், தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர் ஜவாத் ரபீக் மாலிக் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த ‘மிரட்டலை’ அமைச்சர் நிதின் கட்காரி விடுத்தார்.