business

img

டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் ஜிஎஸ்டி வரி - ஒன்றிய அரசு திட்டம்

டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டீசல் வாகனங்கள் தயாரிப்பதை நிறுத்தும் படிக்கும், இல்லையெனில் வரி மேலும் அதிகரிக்கப்படும் என்றும், பிறகு வாகனங்களை விற்பனை செய்வது கடினமாகிவிடும் என்று கார் உற்பத்தியாளர்களுக்கு நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், டீசல் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, அதிக மின்சார வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.