tamilnadu

img

வெறிப் பிரச்சாரம் நடந்த இடங்களில் பாஜக தோல்வி!

புதுதில்லி:
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில், மதவெறியைத் தூண்டும் வகையிலும், தனிநபர் தாக்குதலை முதன்மைப் படுத்தியும் பிரச்சாரம் நடத்திய தொகுதிகள் அனைத்திலும் பாஜகவுக்கு மக்கள் பலத்த அடி கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.தில்லி ஜானக்புரியில் பிரச்சாரம் செய்த, தில்லி மேற்கு மக்களவைத் தொகுதி எம்.பி. பர்வேஷ் வர்மா, “காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு என்ன நடந்ததோ, அதேபோன்று தில்லியிலும் (முஸ்லிம்களுக்கும்) நடக்கும்” என்று மிரட்டல் விடுத்தார்.

இங்கு பாஜக வேட்பாளர் ஆஷிஷ் சூட், ஆம் ஆத்மியின் ராஜேஷ் ரிஷியிடம் 14 ஆயிரத்து 917 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந் துள்ளார்.பர்வேஷ் வர்மாவின் மாமனாரும் தோற்றுப் போனார்.ரித்தாலா தொகுதியில் பாஜக வேட்பாளர் மணிஷ் சவுத்ரிக்குஆதரவாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் பிரச்சாரம் செய்தார்.சிஏஏ-வை எதிர்த்து போராடுவோரை சுட்டுத்தள்ள வேண்டும் என்றுஅப்போது அவர் கூறினார். இந்நிலையில், மணிஷ் சவுத்ரி, 13 ஆயிரத்து 817 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.மாடல் டவுண் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கபில் மிஸ்ரா, “தில்லி தேர்தல் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சை போன்றது” என்று வெறியைக் கிளப்பியிருந்தார். அவர், ஆம்ஆத்மியின் அகிலேஷ் பதி திரிபாதியிடம் படுதோல்வி அடைந்துள்ளார்.