புதுதில்லி:
மக்களவைக்கு ஐந்து கட்டமாக மொத்தம் 424 இடங்களுக்கு நடந்து முடிந்துள்ள வாக்குப்பதிவு களில் பாஜக கூட்டணிக்கு 124 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று நியூஸ்கிளிக் தேர்தல் பகுப்பாய்வுக் குழுவினர் கணித்து ள்ளனர். இதன்மூலம் அடுத்து பாஜக ஆட்சியில் அமரமுடியாது என்பது நிச்சயமாகிறது.
மே 6 அன்று 51 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களுடன் மொத்தம் 424 இடங்களுக்குத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவற்றை நியூஸ்கிளிக் தேர்தல் பகுப்பாய்வுக்குழுவினர் சமீபத்தில் மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டு ள்ள மனமாற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்ததிலிருந்து, பாஜக கூட்டணிக்கு 124 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணித்திருக்கிறது. இதே 424 இடங்களில் 2014இல் பாஜக 251 இடங்களைப் பெற்றிருந்தது. அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியானது முந்தைய 55 என்கிற தன் எண்ணிக்கையிலிருந்து 169ஆக தன்னை உயர்த்திக் கொள்கிறது.
மேலும் தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாநிலக் கட்சிகளில் பல, தேர்தல் முடிவடைந்ததற்குப்பின்னர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குத்தாவும். இவற்றில் முக்கியமாக உத்தரப்பிரதேசத் தில், 2014இல் 4 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதிக் கட்சிக் கூட்டணி, இந்தத் தேர்த லில்37 இடங்களைப் பெறும். உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் 27 இடங் களுக்கு இன்னமும் தேர்தல் நடைபெறவேண்டியுள்ளது. அநேக மாக அங்கும் இக்கூட்டணிக்கு மேலும் வெற்றிகள் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2014இல் இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் பாஜக 73 இடங்களைப் பெற்றிருந்தது.
தமிழ்நாட்டில் பாஜக-அஇஅதிமுக கூட்டணி மிக மோச மான அளவில் திமுக-இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தை கள் கூட்டணியால் தோற்கடிக்கப் படுகிறது. மொத்தம் தேர்தல் நடைபெறும் 38 இடங்களில் 28 இடங்களைத் திமுக கூட்டணி கைப்பற்று கிறது. ஓரிடத்திற்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.அதேபோன்று முன்பு பாஜக வலுவாக இருந்த மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பாஜக கணிசமான அளவிற்கு முன்பு தான் கைப்பற்றியிருந்த இடங்களை இழக்கிறது.
ஐந்து கட்டங்களில் நடந்துள்ள தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகள் முன்பு 10 இடங்களைப் பெற்றிருந்தன. அவை இப்போது 19ஆக உயர்கிறது.மோடி அரசாங்கத்தின்மீது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள விரக்தி, வேலையின்மைக் கொடுமை, ஊதிய உயர்வு இன்மை, அதிகரித்துள்ள ஊழல், ஆர்எஸ்எஸ்/பாஜக முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீது கட்ட விழ்த்து விட்டுள்ள மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் ஆகியவை மக்கள் மத்தியில் பாஜக கூட்டணி மீது வெறுப்பை ஏற்படு த்தியுள்ளதால் இக்கூட்டணிக்கு இவ்வாறு படுதோல்வி காத்திருக்கிறது.
மக்களின் எண்ணவோட்டத் தின்படி பார்த்தோமானால், மே 23 அன்று பாஜக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் மரண அடி வழங்கியிருப்பது தெரிந்துவிடும்.
ஆதாரம்: நியூஸ்கிளிக் இணைய இதழ்
தமிழில்: ச.வீரமணி