அகர்தலா;
திரிபுராவில் டிஒய்எப்ஐ, எஸ்எப்ஐ ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். முகாமை திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் திறந்து வைத்த பின்னர் இந்த தாக்குதல் நடந்தது. இதில் எஸ்எப்ஐ திரிபுரா மாநில செயலாளர் சந்தீபன் தாஸ் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இரத்த வங்கிகளுக்கு உதவுவதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இந்திய மாணவர் சங்கமும் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்ததாக சிபிஎம் தலைவர் அமல் சக்ரவர்த்தி தெரிவித்தார். சம்பவம் குறித்து மேற்கு அகர்தலா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்குதலுக்குப் பின்னரும் முகாம் சுறுசுறுப்பாக செயல்பட்டதாக டிஒய்எப்ஐ மாநில செயலாளர் நபருன் தாஸ் தெரிவித்தார்.