tamilnadu

இந்திரா காந்தி பொது மருத்துவமனையில் மருந்துகளின் பற்றாக்குறையை போக்குக வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

புதுச்சேரி, மார்ச் 11- இந்திரா காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மருந்துகளின் பற்றாக்குறை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் பிரசாந்த் குமார் பான்டா விடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியு றுத்தினர். இதன் விவரம் வரு மாறு:- புதுச்சேரி கதிர்காமத்தில் இயங்கிவரும் இந்திரா காந்தி அரசு பொதுமருத்துவ மனையில் கடந்த சில நாட்க ளாக  (பி.பி)இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மருந்துகள் வழங்கப்படவில்லை. இதனால்  நோயாளிகள்  மிகுந்த சிரமத்திற்கு உள்ளா கியுள்ளனர்.மேலும் மருத்துவமனையில் ஆம்புல ன்ஸ், ஜெனரேட்டர் வசதிகள் பெரிய அளவில் இல்லை.  அரசு மருத்துவமனை களை நம்பி வரும் ஏழை, எளிய மக்களின் அடிப்படை மருத்துவத்தை அளிக்க வேண்டியது  அரசின் கடமை. எனவே மருத்துவமனையில் அனைத்து அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். மருத்துவமனை யில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையை போக்க வேண்டும். இதன் மீது நட வடிக்கை எடுக்க வில்லை என்றால் மக்களை திரட்டி மருத்துவமனையை முற்று கையிடும் போராட்டம் நடைபெறும்.  எனவே கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசத் தலை வர்ஆனந்த், உழவர்கரை நகரக்குழு தலைவர் சஞ்சய்சேகரன், பொரு ளாளர் நிலவழகன்ஆகி யோர் புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை செயலாளர் பிரசாந்த்குமார் பான்டாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.