tamilnadu

img

அசாம் குடிமக்கள் தேசியப் பதிவேடு...லட்சக்கணக்கான மக்களை மதவாத நோக்கத்துடன் துயரத்தில் தள்ளுவதா?

புதுதில்லி:
குடிமக்களின் தேசிய பதிவேட்டில் ‘மாதிரி மறு - சரிபார்ப்பு’க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஜூலை 18 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2018 ஜூலை 30 அன்று வெளியிடப்பட்ட அசாம் மாநில குடிமக்களின் தேசிய வரைவு பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்களை மாதிரி மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தக் கோரி மத்திய அரசும் அசாம் மாநில அரசும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இதன் மூலம் குடிமக்களின் தேசியப் பதிவேடு (NRC - National Register Of Citizens) வெளி யீட்டு நாளை ஜூலை 31-ம் தேதியிலிருந்து நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றன. இந்த கோரிக்கையின்படி, வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலிருந்து சேர்க்கப்பட்ட பெயர்களை  20 சதவீதம் மாதிரி மறு சரிபார்ப்புக்கும், மற்ற மாவட்டங்களி லிருந்து சேர்க்கப்பட்டுள்ள பெயர்களை 30 சதவீதம் மாதிரி மறு சரிபார்ப்புக்கும் உட்படுத்த வேண்டுமென மத்திய மற்றும் அசாம் மாநில அரசுகள் விரும்புகின்றன. இந்த சரிபார்ப்பு, பல நாட்களையும், தங்களது வாழ்வாதாரங்களையும் இழந்து, மீண்டும் மீண்டும் பலமுறை அதிகாரிகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, பல சான்றிதழ் களை அலைந்து திரிந்து சமர்ப்பித்த லட்சக்கணக்கான குடிமக்களை பெரும் துயரத்திற்கும், சோதனைக்குள்ளாக்கும் நிலைக்கு வழிவகுக்கும்.  எனவே மீண்டும் சரிபார்ப்பு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. ஜூலை 31 இறுதி நாள் நெருங்கும் நிலையில், குடிமக்களின் தேசிய பதிவேட்டில் மதம் தொடர்பான தகவல்களை ஆராய வேண்டும் என்ற நோக்கத்துடன்,  பாஜகவின் தூண்டு தலின் பேரிலேயே இந்த திடீர் கோரிக்கை எழுந்துள்ளது. 

குடிமக்களின் தேசிய பதிவு பட்டியலு டன் தொடர்புடைய பிரச்சனைகள் வித்தியாசமானவை. பட்டியலிலிருந்து வெளியேற்றப் பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக சட்ட நடவடிக்கைகள் துரிதமாக நடக்குமா? இப்பட்டியலிலிருந்து விலக்கப்படும்  லட்சக் கணக்கான மக்களின் நிலை என்னவாகும்? அவர்களது குடியுரிமை அந்தஸ்து என்ன வாகும்? இப்படி பல கேள்விகள் உள்ளன. எனவே, குடிமக்களின் தேசிய பதிவேட்டை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டு, அதைக் கண்காணித்த உச்சநீதிமன்றமே, இதுபோன்ற விவகாரங்களுக்கு பொறுப் பேற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனையில் குடிமக்களின் இந்திய குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் அடிப்படையான அம்சங்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளது.