tamilnadu

img

மதவாத அரசியலுக்கு விடைகொடுக்க திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு

மதுரை, ஏப்.15-மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: இந்திய மக்கள் இப்போது சந்திக்கவிருக்கும் தேர்தல் மதவாதத்துக்கும், மதச்சார்பின்மைக் கும் இடையே நடக்கும் போர். ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை, மதச் சிறுபான்மையினரின் நியாயமான உரிமைக்குரலை மதவாத அரசியல்மறுக்கும் என்பதால் இந்தத் தேர்தலில் மதவாத அரசியலுக்கு விடைகொடுப்போம். மதவாத கருத்தியலை உயிர்க்கொள்கையாக கொண்ட கட்சியைப் புறக்கணிப்போம். தேர்தலில் வெற்றி கண்டு ஆட்சியதிகாரத்தை சுவைக்கலாம் என்ற கனவில் மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிக்கும் கட்சிகளோடு அணி சேர்ந்துள்ள கட்சிகளையும் ஒதுக்குவோம். மதவாதத்தை கொள்கையாகக் கொண்ட கட்சியை இதுவும் ஒரு கட்சிதானே என்று பொதுமக்கள் கருதிவிடக்கூடாது. இந்திய நாட்டின் மிகப்பெரிய எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், சமய சார்பற்ற அறிவுஜீவிகள், கல்வியாளர்கள் அனைவரும் இந்தியத் தேர்தல் வரலாற்றில் எப்போதும் கேள்விப்படாத வகையில்மதவாத கட்சிகள் வெற்றி பெறக் கூடாது என்ற கோரிக்கையை இந் திய மக்களுக்கு விடுத்துள்ளதை மறந்து விடக்கூடாது.இதனடிப்படையில் கிறிஸ்தவ அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு ஆயர்கள்தலைமையில் நடைபெற்றது. இதில்ஏழை, எளிய மக்களின் நலன்கருதியும், தேசத்தின் எதிர்காலம் கருதியும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 


மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு கிறிஸ்தவ மக்களின்கோரிக்கைகளும் முன்மொழியப்பட்டன. அதில் பட்டியல் சாதியினருக்கும், பழங்குடியினருக்கும் அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ளசலுகைகளை மதம் மாறிய கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கும் வழங்குமாறு குடியரசுத் தலைவரின்ஆணையில் மாற்றம் செய்ய வேண் டும். கல்வி வேலைவாய்ப்பில் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசுக்கல்வி நிறுவனங்களுக்கு நிகரான நிதி, சிறுபான்மை கல்விநிறுவனங்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்தப் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.கோவலத்தில் துறைமுகம் அமைவதை தடுத்து நிறுத்த வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும். 


மக்களவை, சட்டமன்றம், உள் ளாட்சித் தேர்தல்களில் கிறிஸ்தவர், இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கத்தோலிக்க கிறிஸ்தவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். மதுரை யானைக்கல் காந்திசிலை அருகில் உள்ள பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் சிலைக்கு அரசு மரியாதை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.