சேலம், ஏப்.12- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தோழிகூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளானர்.தமிழகம் முழுவதிலும் உள்ள வெள்ளி கொழுது, பஞ்சாலை, நெசவு தொழில் இவற்றில் பணியாற்றும் பெண்களை திரட்டி அவர்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றும் தனியார் அமைப்பு தோழி கூட்டமைப்பு. இந்த அமைப்பில் தமிழகம் முழுவதிலும் எண்ணற்ற உழைக்கும் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.இதன்ஒருபகுதியாக சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு தோழி கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.மேலும், பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், 33 சதவிகித இட ஒதுக்கீடு, பணியிடங்களில் பாதுகாப்பு, சமூக மேம்பாடு அடைய திமுககூட்டணிகட்சியினருக்கு வாக்களிப்பதாகவும் தோழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அ.அலமேலு தெரிவித்தார்.இதில், மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.ராஜாத்தி, தோழி கூட்டமைப்பை சேர்ந்த மகாலட்சுமி, வசந்தி உள்ளிட்டு பலர் உடனிருந்தனர்.