நாமக்கல், ஏப்.8-திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அகில இந்திய பிஎஸ்என்எல்.டிஓடி ஓய்வூதியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளாது.அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் சேலம், நாமக்கல் மாவட்ட 4 ஆவது மாவட்ட மாநாடுமாவட்ட தலைவர் ப.ராமசாமி தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஜி.கே.நரசிம்மன், மாவட்ட அமைப்புச் செயலாளர் டி.பழனி ஆகியோர் துவக்கி வைத்து பேசினார். மாநில உதவிச் செயலாளர் சி.குப்புசாமி சிறப்புரையாற்றினார். பிஎஸ்என்எல்ஈயூ மாநில உதவிச் செயலாளர் எஸ்.தமிழ்மணி, அஞ்சல் ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் பிரதாப்சிங், ஓய்வூதியர் சங்க தருமபுரி மாவட்ட செயலாளர் அழகிரி, நாமக்கல் கிளை உதவி செயலாளர் ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் முன்னதாக, இம்மாநாட்டில், பிஎஸ்என்எல் அரசு நிறுவனத்துக்கு 4 ஜி சேவை உரிமம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும். விருப்ப ஓய்வு திட்டத்தை கைவிட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளை முறியடித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்போம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இடம் பெற்றுள்ள வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதனையடுத்து. இம்மாநாட்டில் புதிய தலைவராக ப.ராமசாமி, செயலாளராக எம்.மதியழகன், பொருளாளராக மைக்கேல் உட்பட 15 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது.நாமக்கல் கிளை செயலாளர் கோபால், திருச்செங்கோடு கிளைச் செயலாளர் ராமசாமி மற்றும் முத்துசாமி, அங்குராஜ், ராமசாமி, குமரேசன், செங்கோடன் உள்ளிட்ட சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.