tamilnadu

img

முதலாளிகளைக் காப்பாற்றவே வங்கிகள் இணைப்பா?

புதுதில்லி:
நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை, 27-இல் இருந்து 12 ஆகக் குறைக்கப்படுவதாகவும், 10 வங்கிகளை 4 பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படுவதாகவும் மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமையன்று அறிவித்துள்ளார்.பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு துறைகளில் வளர்ச்சிமுடங்கியுள்ளது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஜிடிபி 5 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது பங்கு வர்த்தகத்திலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பிலும் சரிவு தொடர்கிறது.இந்நிலையில், அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதில், நிர்மலா சீதாராமன் வங்கிகள் இணைப்பில் தீவிரம் காட்டுவது ஏன்? என்று கேள்விகள் எழுந் துள்ளன. பொதுத்துறை வங்கிகளில் கடன்வாங்கி விட்டு அவற்றை திருப்பிச்செலுத்தாமல் இருக்கும் பெருமுதலாளிகளை காப்பாற்றும் நோக்கம் இதன் பின்னணியில் இருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.“சிண்டிகேட் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, யூனியன் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகியவை இந்த இணைப்பில் உள்ளன. சிண்டிகேட் வங்கியில் அனில் அம்பானி 1225 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தவில்லை. பஞ்சாப் நேசனல் வங்கியில் நீரவ் மோடி சுமார் 11 ஆயிரத்து 200 கோடி ரூபாயைமோசடி செய்திருக்கிறார். அனில் அம்பானி 42 ஆயிரம் கோடி ரூபாய்கடனை யூனியன் வங்கி மற்றும் கனரா வங்கியிலிருந்தும் பெற்றிருக்கிறார். வங்கிகள் இணைப்பு மூலம் இந்த வங்கிகளிடம் உள்ள வராக் கடன் சுமை மற்ற வங்கிகளின் மீதுசுமத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுக் கள் எழுந்துள்ளன.