tamilnadu

img

நிர்மலா சீதாராமன் சந்திப்பை புறக்கணிக்கும் பத்திரிகையாளர்கள்

புதுதில்லி:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரப்போக்குடன் நடந்து கொள்கிறார்; பத்திரிகையாளர்களை மதிப்பதில்லை என்று ஊடகத்துறையினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். “நிர்மலா சீதாராமனின் செய்தியாளர் சந்திப்பு என்றால்,அதில், நிர்மலா சீதாராமனின் அறிக்கை என்ற பெயரில் செய்திக்குறிப்பு ஒன்றை அதிகாரிகள் வாசிப்பார்கள். ஊடகங்கள் அந்த தகவல்களைத் திரட்டிக் கொள்ள வேண்டும். மற்றபடி கேள்விகள் எதையும் எழுப்பக் கூடாது. அமைச்சரும் பதில் சொல்ல மாட்டார்.” இதுதான் நடைமுறை.

பத்திரிகையாளர்களோ, “இது நல்லதல்ல; மத்திய அமைச்சராக இருப்பவர் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்” என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். ஆனால், நிர்மலா சீதாராமன் அதை ஏற்காததால், அவரது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று பத்திரிகையாளர் கள் முடிவு செய்தனர்.2019-20 பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து, விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு நிர்மலா சீதாராமன் ஏற்பாடு செய்திருந்தார். அந்த விருந்து நிகழ்ச்சிக்கும் கூட பத்திரிகையாளர்கள் செல்லவில்லை.
இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பும், மீண்டும்  ஒருசந்திப்பை நிர்மலா சீதாராமன்நடத்தியுள்ளார். வழக்கம்போலமுன்னணி பத்திரிகையாளர் கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், கேள்வி - பதில் இடம்பெறுவதற்கு, அமைச்சரிடம் அனுமதிபெற்று வருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். வந்திருந்த ஒரு சில பத்திரிகையாளர்களும், ‘என்னதான் நடக்கிறது, எனபார்ப்போமே..’ என்று காத்திருந்துள்ளனர். ஆனால், அமைச்சரைப் பார்க்கப் போன தலைமைப் பொருளாதார ஆலோசகர், கடைசிவரை அரங்குக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது ஊடகத்துறையினரை மேலும் அதிருப்திக்கு உள் ளாக்கி இருக்கிறது.