tamilnadu

img

ஜிஎஸ்டி இழப்பீட்டை கடனாக வாங்கிக் கொள்ள ஒப்புதல்... உரிமையைக் காவுகொடுத்த 13 மாநில ‘பாஜக’ முதல்வர்கள்

புதுதில்லி:
2020 - 21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகளுக்கு இப்போதைக்கு வழங்க முடியாது என்று மத்திய பாஜக அரசு அண்மையில் பகிரங்கமாக கூறி விட்டது.பின்னர் போனால் போகிறது என்று மாநிலங்கள் மீது கருணைப்பட்டு, ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வருவாய் இழப்பைஈடுகட்ட இரண்டு புதிய திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. 

முதல் திட்டத்தின்படி 2 லட்சத்து 35 ஆயிரம் ஜிஎஸ்டி தொகையில் ரூ. 97 ஆயிரம் கோடியை மட்டும்,ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுக் கொள்வதுஅல்லது வருவாய் பற்றாக்குறையான ரூ. 2.35 லட்சம் கோடியையும் வெளியே கடனாகத் திரட்டிக் கொள்வது...ஆனால், இந்த இரண்டையுமே மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்களுக்கு தரவேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. தன்னிடம் பணமில்லாவிட்டாலும், மத்திய அரசுதான் எங்காவது கடன்வாங்கி, மாநிலங்களுக்குத் தர வேண்டும் என்று கூறி விட்டன. இந்நிலையில் பாஜக ஆளும் மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் பீகார், உத்தரப் பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, சிக்கிம், திரிபுரா,உத்தரகண்ட், ஒடிசா, மணிப்பூர், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள்தான் ரிசர்வ் வங்கியிடமிருந்தும் சந்தையிலிருந்தும் கடன்வாங்கிக் கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளன.