புதுதில்லி:
தங்கள் கட்சி எம்எல்ஏ-க்களை, கட்சி மாறச்சொல்லி பாஜக குதிரை பேரம் நடத்துவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருந்தது. அதன்படியே கடந்த வெள்ளிக்கிழமையன்று அனில் பாஜ்பாய் என்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ பாஜக-வுக்குத் தாவினார். இந்நிலையில், தேவேந்திர குமார் ஷெராவத் என்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ-வும் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். 3 நாட்களில் 2 எம்எல்ஏ-க்களை பாஜக வளைத்துள்ளது.