புதுதில்லி:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தலைமையில் ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஆலோசனையில் ஈடுபட்டன. இது தொடர்பாக ஏற்கெனவே அரவிந்த் கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் ஆலோசனை நடத்தினர்.இந்தநிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிபோட்டியிடாது என்று அந்த கட்சியின்ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.ind