தில்லி
இந்தியாவில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசு விதித்த 21 நாள் ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், இந்த ஊரடங்கை மேலும் 19 நாட்கள் அதாவது மே 3-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் கடமையாக்கப்படும். அதன் பின் கொரோனா அதிகம் உள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ஊரடங்கு காலம் நீடிக்கும் வரை ரயில் போக்குவரத்து இல்லை ரயில்வே நிர்வாகம் அறிவித்துவிட்ட நிலையில், மே 3-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகமும் அறிவித்துள்ளது.