tamilnadu

img

தீபாவளியை தொடர்ந்து தில்லி நொய்டாவில் மிக மோசமான அளவை எட்டியது காற்று மாசு

தில்லி, நொய்டாவில் தீபாவளியை தொடர்ந்து காற்று மாசுபாடு மிக மோசமான அளவை எட்டி உள்ளது.   
வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது. காற்று மாசை குறைக்க தில்லியில்  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் காற்று மாசு ஓரளவு குறைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின்போது  பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், தில்லி மற்றும் அருகில் உள்ள நொய்டா நகரில் காற்று மாசு படிப்படியாக உயர்ந்து மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. 

நேற்று இரவு நிலவரப்படி தில்லியில் காற்றின் தரக்குறியீடு 306, நொய்டாவில் 356 என மிக மோசமான நிலையில் இருந்தது. அரியானா மாநிலம் குருகிராமத்தின் என்ஐஎஸ்இ கவால் பகாரி பகுதியில் காற்றின் தரக் குறியீடு 279 ஆக இருந்தது.  காற்றின் மாசு அதிகரித்ததால் தில்லியில் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் அலர்ஜி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.