உலக நாடுகளில் காற்று மாசுபடுத்துவதில் இந்தியாவும் சீனாவும் முதல் ஐந்தாம் இடத்தில் உள்ளதாக நோட்ரோ டேம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். 2.5 பில்லியனுக்கும் மேல் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் இந்த இரண்டு நாடுகளிலும் மிக அதிக அளவிலான காற்று மாசு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியில் தகவல் வெளியானது.
இவ்வாறான காற்று மாசினால் காலவெப்பநிலை மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றம் பெரிதாகப் பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் புயல் , நிலச்சரிவு , மழைவெள்ளம் , வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்றனர். சென்ற நாட்களில் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட புயலும் , இமாச்சல் பிரதேஷில் ஏற்பட்ட நிலச்சரிவும் இதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும்.