நாட்டில் உள்ள 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 3 நிறுவனங்கள் அதானி நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், ‘விமான நிலையங்களின் தகுதியின் அடிப்படையில் அவற்றை தனியார் மயமாக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி தனியார் மயமாக்கலுக்காக 6 விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதில் 3 விமான நிலையங்களை தனியாருக்கு அளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கொல்கத்தா விமான நிலையத்தை உடனடியாக தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை’ என்று கூறினார்.
இந்த விமான நிலையங்களை பெற்றிருக்கும் நிறுவனம் எது? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 6 விமான நிலையங்களுக்காக 9 நிறுவனங்களிடம் இருந்து ஏல டெண்டர்கள் பெறப்பட்டன எனவும், இதில் 3 விமான நிலையங்கள் அதானி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.