மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை,ஆக.22- திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்ற 37 தமிழக மருத்துவர்களிடம், இந்தி தெரியவில்லை என்றால் வகுப்பிலிருந்து வெளியேறுங்கள் என்று, செய லாளர் ராஜேஷ் கொடேசா என்பவர் ஆணவத்துடனும், இந்தி மொழி வெறியுடனும், மிரட்டல் விடுத்திருப்பதாக” கூறியுள்ளார். மேலும், மத்தியில் உள்ள அதிகாரிகளை வைத்து இந்தியைத் திணிப்பது தான் எங்களின் திட்டம் என்ற பாஜக அரசின் எண்ணத்தை இது வெளிப்படுத்துகிறது. இனி இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நேர்ந்து விடாமல் பிரதமர் உறுதி செய்திட வேண்டும். மாநிலங்களுக்கு இடையே இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தில் தான், பயிற்சி கள் நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.