சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் அறைகூவல்
புதுதில்லி, ஜூன் 13- மத்திய பாஜக அரசாங்கத்தின் தேச விரோத, மக்கள் விரோத நட வடிக்கைகளுக்கு எதிராக, தொழி லாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் வர்க்க-வெகுஜன அமைப்புகளின் கூட்டு இயக்கங்களைத் தீவிரப்படுத்திடு வோம் என்று சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன.
சிஐடியு, அகில இந்திய விவசா யிகள் சங்கம், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் அகில இந்தியத் தலைவர்களின் கூட்டுக் கூட்டம் புதுதில்லியில் உள்ள சிஐடியு அலு வலகமான பி.டி.ரணதிவே பவனில் ஜூன் 9ஆம் தேதியன்று நடை பெற்றது. இக்கூட்டம், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சமூக முடக்கம் மற்றும் மோடி தலைமையில் உள்ள பாஜக அரசின் தொழிலாளர் விரோத – விவசாயிகள் விரோத நடவடிக்கைகள் குறித்து விவா தித்தது. பின்னர் இது தொடர்பாக தபன்சென் (சிஐடியு), ஹன்னன் முல்லா (அகில இந்திய விவசாயிகள் சங்கம்), பி.வெங்கட் (அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்) ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது:
“மத்திய அரசாங்கம், சமூக முடக் கத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நவீன தாராளமயக் கொள்கை களை வெறித்தனமாக முன்னெ டுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுத்திருப்பது குறித்து ஆழமாக விவாதித்தது. மத்திய அரசு, விவசாயப்பொருளாதாரத்தில் விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்களின் வாழ்வை நாசமாக்கும் விதத்திலும், அவசரச் சட்டங்கள் மூலமாக நிலக் கார்ப்பரேட்டுகளை உருவாக்குவதற்கும், உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தை விளை விக்கும் விதத்திலும் நடவடிக்கை ககள் எடுத்திருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களை முற்றிலுமாக அழிக்கும் விதத்திலும் முக்கியமான மற்றும் கேந்திரமான துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டை தாராளமாக அனு மதித்திடவும், அதன்மூலம் தன்னி றைவுப் பொருளாதாரத்திற்கு முடிவு கட்டிடவும் நடவடிக்கைகள் எடுத்தி ருக்கிறது. அனைத்துத் தொழிலா ளர் நலச் சட்டங்களையும் ரத்து செய்துவிட்டு, தொழிலாளர்களை அடிமைகளாக மாற்றவும் நடவ டிக்கைகள் எடுத்திருக்கிறது. கொ ரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை கள் எடுப்பதற்குப் பதிலாக, பாஜக அரசாங்கம் தன்னுடைய அதிகா ரங்கள் அனைத்தையும் பாசிஸ்ட்டு கள் பாணியில் எதேச்சதிகார நடவ டிக்கைகள் மூலமாக குவித்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுத்தி ருக்கிறது. அதே சமயத்தில், ஆர் எஸ்எஸ்-சால் தலைமை தாங்கப் படும் சக்திகள் கொரோனா வைரஸ் தொற்றைக்கூட மதவெறி நோக்கத் திற்குப் பயன்படுத்திக் கொண்டி ருக்கின்றன.
சமூக முடக்கத்தின் விளைவாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள தங்கள் இல்லங்களுக்குத் திரும்பும் நிலையையும், மிகவும் மோச மான முறையில் வேலையின்மை யையும், வறுமை நிலையையும், குறிப்பாக கிராமப்புறங்களில் மிக மோசமான நிலையில் சுகாதார வசதியின்மையையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மட்டும்தான் உலகமே பாராட்டக் கூடிய விதத்தில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப் படுத்திட சிறப்பான முறையில் நடவடிக்கைகள் எடுத்திருக்கின் றன. மேலும் புலம்பெயர் தொழி லாளர்களையும் விருந்தினர்க ளாகப் பாவித்து, கௌரவமான முறையில் நடத்தி இருக்கிறது. இவை அனைத்தும் நவீன தாராள மயக் கொள்கைகளுக்கு மாற்றா கும்.
மத்திய அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் அதிருப்தி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது அரசாங்கத் தின் கொள்கைகளுக்கு எதிராக ஒவ்வொரு துறையிலும் உள்ள சங் கங்கள் விடுக்கும் அறைகூவலுக்கு மக்கள் பங்கெடுப்பதில் நன்கு பிரதி பலிக்கிறது.
சிஐடியு, ஏப்ரல் 21, மே 14 மற்றும் மே 30 தேதிகளில் நடத்திய போ ராட்டங்களிலும், மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டுமேடை சார்பில் 2020 மே 22 விடுத்த அறைகூவ லிலும், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மே 16, மே 27 மற்றும் ஜூன் 4 அன்று நடத்திய போராட்டங்க ளிலும் நன்கு வெளிப்பட்டது.
இத்தகைய நிலைமையில், தொழிலாளர்கள்-விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்கள் ஆகி யோர் இணைந்து ஒன்றுபட்டுப் போராட வேண்டிய அவசியத் தேவை எழுந்துள்ளதாக, இக்கூட்டம் முடிவு செய்கிறது. இப்போராட்டங்களை அனைத்து மட்டங்களிலும், குறிப்பாக மக்களின் ஜீவாதாரப் பிரச் சனைகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ள அடிமட்ட அளவிலும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தீர்மானிக்கிறது. எனவே கிராம அளவிலும் போராட்டங்களை நடத்த வேண்டியது அவசியம் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மேலும் மக்களின் சுகாதாரம், உணவு, வருமானம் மற்றும் வேலை வாய்ப்பு உட்பட இதர கோரிக்கை களையும் முன்வைத்து நாடு தழுவிய அளவில் கூட்டுப் பிரச்சா ரத்தை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கிறது.
கோரிக்கைகள்
நாட்டிலுள்ள அனைத்து மக்க ளுக்கும் இலவசமாக சுகாதாரப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்திட வேண்டும்.
ஒவ்வொரு நபருக்கும் ஒரு மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும்.
வருமானவரி வரம்புக்குள் வராத அனைத்துக்குடும்பங்களுக்கும் மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அளித்திட வேண்டும்.
மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத் தின் கீழ், 200 நாட்கள் வேலை வழங்கிட வேண்டும். இதற்கான ஊதியம் நாளொன்றுக்கு 600 ரூபாய் என நிர்ணயம் செய்திட வேண்டும். அல்லது வேலை யில்லாதோருக்கான ஊதியம் அளித்திட வேண்டும். நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் கொண்டுவரப்பட்டு அமல் படுத்தப்பட வேண்டும்.
அத்தியாவசியப் பொருள் கள் சட்டத்தை ரத்து செய்வதற்கா கவும், பண்ணை வர்த்தகம், மின்சார சட்டம் மற்றும் தொழி லாளர் சட்டங்கள் தொடர்பாகவும் கொண்டுவந்துள்ள அவசரச் சட்டங்கள்/நிர்வாக உத்தரவு களை ரத்து செய்திட வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்திட வேண்டும்.
இக்கோரிக்கைகளின்மீது கூட்டு இயக்கங்களை நடத்திட வேண்டும் எனக் கூட்டம் அறை கூவல் விடுத்துள்ளது.
2020 ஜூன் – ஜூலை மாதங்களில் கிராம அளவில் கூட்டுப் பிரச்சா ரங்களை நடத்திட வேண்டும்.
2020 ஜூலை 23 அன்று ஸ்தல/ கிராம/உட்கோட்ட அளவில் இயக்கங்கள் நடத்திட வேண்டும்.
2020 ஆகஸ்ட் 9 அன்று நாடு தழுவிய அளவில் பிரம்மாண்ட மான முறையில் தீவிரமான முறையில் தொழிலாளர்கள்-விவசாயிகள்-விவசாயத் தொழி லாளர்களை அணிதிரட்டி இயக்கம் நடத்திட வேண்டும்.
வரவிருக்கும் காலங்களில் தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலா ளர் சங்கங்கள் மற்றும் வர்க்க - வெகுஜன அமைப்புகள் அனைத் தையும் ஒன்றுதிரட்டி, மத்திய அரசின் தேச விரோத, மக்கள் விரோ தக் கொள்கைகளுக்கு எதிராக, கூட்டுப் போராட்டங்களை நடத்திட வேண்டும்.”
இவ்வாறு அவர்கள் அறிக்கை யில் கூறியுள்ளனர்.