tamilnadu

img

இந்தியாவில் கொரோனாவால் 90 கோடி பேர் பாதிப்பாம்...

செகோர்:
நாடெங்கும் கொரோனா பாதிப்புஅதிகரித்து வருவதால் தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிதல்உள்ளிட்டவை கட்டாயம் ஆக்கப்பட் டுள்ளன. ஆனால், பாஜக ஆட்சிநடக்கும் மாநிலங்களில், ஆளும்கட்சியினரே அவற்றைப் பின்பற்றுவதில்லை. குறிப்பாக கர்நாடக பாஜகஅமைச்சர் ஸ்ரீராமுலு, ஒடிசா பாஜக எம்.பி. அபராஜிதா உள்ளிட்டோர் தொடர்ந்து தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை மீறி வருகின்றனர்.

அந்த வகையில், மத்தியப்பிரதேச மாநிலம் செகோர் மாவட்டம் இச்சாவார் தொகுதியில் பாஜக எம்எல்ஏ கரண்சிங் வர்மாவும், தனிமனித இடைவெளி விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் கிராம மக்களும் பாஜகவினரும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டுகூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.இது ஒருபுறமிருக்க, பொதுக்கூட்டத்தில் பேசிய கரண்சிங் வர்மா, “இந்தியாவில் 85 கோடி பேர் முதல் 90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறிபரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

“கொரோனா என்பது சீனாவில் இருந்து வந்த கொள்ளை நோய் ஆகும். இது நாடு முழுவதும் பரவிஉள்ளது. கொரோனாவால் சுமார்85 முதல் 90 கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் நாட்டில் உள்ள அனைத்து பணமும் அதற்கேசெலவாகிறது. எனவே மக்கள் அனைவரும் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நன்கொடைகளை அனுப்ப வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை தற்போதுதான் மூன்றரை லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், கரண்சிங் வர்மா 90 கோடிஎன்று உளறிக் கொட்டியதைக் குறிப் பிட்டு, சமூகவலைத் தளங்களில் பல ரும் அவரைக் கிண்டலடித்து வருகின்றனர்.