அறந்தாங்கி, மே 15- புதுக்கோட்டை மாவட்டத்தில் ஸ்கார்ப் இந்தியா (கிராம தொலைதூர மனநல சேவை மையம்) சார்பில் ஆவுடை யார்கோவில், திருமயம் உள்ளிட்ட தாலுகாக்களில் 6000 பேருக்கு மனநலம் மருத்துவம் பார்க்கப்பட்டு தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, உதவித்தொகை, சிறு தொழில் கடன், வாழ்வாதாரத்தை முன்னேற்றம் செய்வதற்காக பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கால் கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் ஆவுடையார் கோவில் தாலுகாவில் மனநலம் பாதிக் கப்பட்ட 20 நபர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவை ஸ்கார்ப் இந்தியா வாழ்வா தார ஒருங்கிணைப்பாளர் தி.சேகர், களப் பணியாளர் அம்பிகா ஆகியோர் முன்னிலையில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் உமாதேவி, கவுன்சிலர் பாலசுந்தரி ஆகி யோர் வழங்கினர். சந்திரா ராஜமாணிக்கம், விஜயகுமார், அம்பாள் யூத் இளைஞர் நற்பணி மன்றத்தினர் கலந்து கொண்டனர்.