புதுதில்லி:
இந்தியர்களின் சேமிப்புப்பழக்கம், உலக அளவில் புகழ் பெற்ற ஒன்றாகும். ஆனால், 2020-இல் இந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தில் சரிவுஏற்பட்டுள்ளதாக ‘பேங்க் பஜார் சேமிப்பு மதிப்பீட்டு நிறுவனம்’ (BankBazaar SavingsQuotient) தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.
கடந்த 2020 ஜூலை மாதம்வெளியிடப்பட்ட பேங்க் பஜார்ஆஸ்பிரேஷன் இன்டெக்ஸ் (பிஏஐ)-ஐத் தொடர்ந்து ‘பேங்க் பஜார் சேமிப்பு மதிப்பீட்டு’ நிறுவனம் தனது இரண் டாம் பதிப்பை செப்டம்பரில் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தில், கடந் தாண்டை விட 6 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, கடந்தாண்டு 38 சதவிகிதமாக இருந்த இந்தியர்களின் சேமிப்புப்பழக்கம் 32 சதவிகிதமாக குறைந்துள்ளது.புதிதாக வேலைவாய்ப்பு பெற்றவர்கள் தங்களின் ஊதியத்தில் 35 சதவிகிதத்தை சேமித்து முதலிடம் பெற்றுள்ளனர். ஆனால், கடந்தாண்டை ஒப்பிடுகையில் இது 5.3 சதவிகித வீழ்ச்சியாக உள்ளது. அதேபோல, பல்வேறு வகைகளில் வருமானம் ஈட்டிவந்தவர்களின் (Moneymooners) சேமிப்பு, கடந் தாண்டு 38 சதவிகிதமாக இருந்த நிலையில், அது 7.5 சதவிகிதம் சரிந்து, 30.5 சதவிகிதமாகவும், செல்வந்தர்களின் (Wealth Warriors) சேமிப்புகடந்தாண்டில் 37 சதவிகிதமாக இருந்த நிலையில், 7 சதவிகிதம் சரிந்து, 30 சதவிகிதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது.வயது அடிப்படையில் பார்த்தால், 28 முதல் 34 வயதுக்கு உட்பட்ட ‘மணிமூனர்கள்’மற்றும் 35 முதல் 45 வயதுக்கு செல்வந்தர்கள்தான் சேமிப்புப்பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர் என்று பேங்க்பஜார் ஆய் வில் கூறப்பட்டுள்ளது.