tamilnadu

img

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

புதுதில்லி,மார்ச் 13- மத்திய அரசு ஊழியர்க ளுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்க ளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப் படி அதிகரித்து வழங்கப்படு கிறது. விலைவாசி உயர்வு க்கு ஏற்ப ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அக விலைப்படி உயர்வு அறி விக்கப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதம் அகவிலைப்படி வழங்கப் பட்டு வருகிறது. தற்போ தைய நடப்பு பருவத்துக்கு அகவிலைப்படியை எத்தனை சதவீதம் உயர்த்துவது என்பது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்து வந்தது.

மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சகங்கள் மூலம் ஆலோசனை பெறப் பட்டன.இதன் அடிப்படை யில் மத்திய அரசு ஊழியர்க ளுக்கு 4 சதவீதம் அக விலைப்படி உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தில்லியில் வெள்ளி யன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்க ளுக்கு 21 சதவீதம் அக விலைப்படி கிடைக்கும்.