லக்னோ:
பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தில், சிறுமிகள்கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படு வது தொடரும் அவலமாக மாறிவிட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் இசாநகரில் ஆகஸ்ட் 14 அன்று13 வயது தலித் சிறுமி கடத்திபாலியல் வன்கொலை செய்யப் பட்டார். அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 24 அன்று நீம்கான் என்ற பகுதியில் 17 வயது தலித் சிறுமி, கல்வி உதவித்தொகை படிவத்தை நிரப்ப சென்ற வழியில் கடத்தப்பட்டு, அவரது பிணம்ஏரிக்கரையில் வீசப்பட்டது.இந்நிலையில்தான், லக்மிபூர் மாவட்டத்தின் சிங்காகி பகுதியில் 3 வயது குழந்தை ஒன்றும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று காணாமல் போன சிறுமியை அவரது பெற்றோர் தேடிவந்த நிலையில், வியாழனன்று அருகிலுள்ள கரும்புத் தோட்டத்திற்குள் குழந்தை உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது உத்தரப்பிரதேச மாநில மக்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி, புலந்த்சாஹர் மாவட்டத்திலுள்ள குர்ஜா எனும் பகுதியில் 8 வயசு சிறுமி ஒருவர் வல்லுறவுமுயற்சியில் குரல்வளை நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்தச் சிறுமியின் உடலும் இதேபோல கரும்புத் தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே குற்றவாளிகளைப் பிடிக்க வழக்கம்போல 7 தனிப்படைகளை உ.பி. பாஜக அரசு அமைத்துள்ளது.