வியாழனன்று 646 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், இன்று 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால, 14 புள்ளிகள் ஏற்றமடைந்து 38,854 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
வெள்ளியன்று 38,865 புள்ளிகளில் வர்த்தகம் துவங்கியது. வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 38,978 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 38,711 புள்ளிகளையும் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 38,854 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இன்றைக்கான சென்செக்ஸ் அட்டவணையில் பார்த்தால் ஒரு டோஜி கேண்டில் உருவாகி இருக்கிறது. டோஜி கேண்டில் உருவானால் சென்செக்ஸ் ஏற்றம் காணப் போகிறதா அல்லது இறக்கம் காணப் போகிறதா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அதாவது சந்தையில் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் இருவருமே சம பலத்துடன் இருக்கிறார்கள் என்பதே பொருளாகும். வாங்குபவர்கள் கை ஓங்கினால் சந்தை ஏற்றம் காணும், விற்பவர்கள் கை ஓங்கினால் சந்தை இறக்கம் காணும்.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 10 பங்குகள் விலை ஏற்றத்திலும், 20 பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் மொத்தம் 2,872 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,413 பங்குகள் ஏற்றத்திலும், 1,271 பங்குகள் விலை இறக்கத்திலும், 188 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 107 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில், எஸ் பி ஐ, டி சி எஸ், டெக் அஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமானது.
இண்டஸ் இண்ட் பேங்க், பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஏஷியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.