புதுதில்லி,டிச.1- வெங்காயம் அதிகமாக விளையும் மாநிலங்களில் கனமழை பெய்ததால், வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் வரத்து குறைந்ததால் அதன் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.140 முதல் 200 வரை விற்கப்படுகிறது.ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சந்தையில் வெங்காயத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் மேற்கொண்ட முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கியில் இருந்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும். டிசம்பர் பிற்பகுதியில் இருந்து ஜனவரி முதல் தேதிக்குள் வெங்காயம் இந்தியா வந்தடையும். கூடுதலாக எகிப்தில் இருந்தும், டிசம்பர் மாதத்திற்குள் 6090 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.