புதுதில்லி:
இதுவரை ஒரு கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்டேக் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளொன்றுக்கு சராசரியாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாஸ்டேக் விநியோகிக்கப்படுகிறது. தினமும் 30 லட்சம்எண்ணிக்கையில் 52 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது என கூறப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சுங்க கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும், தேசிய நெஞ்சாலைகளில் உள்ள 523 சுங்கச்சாவடிகளில் செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஜனவரி 15-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.