tamilnadu

img

கொரோனா  ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு... ஒருவர் பலி

மியான்மர்: 
மியான்மரில் கொரோனா வைரஸ் சோதனை மாதிரிகளை கொண்டு சென்ற  உலக சுகாதார அமைப்பின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் ஓட்டுநர் பலியானார் மற்றுமொரு அரசு அதிகாரி பலத்த காயமடைந்தார்.

மியான்மரின் வடமேற்கு மாநிலமான ராகினில் உள்ள மின்பியா டவுன்ஷிப்பில் திங்கள்கிழமை இந்தச் நடந்தது. இதில் வாகன ஓட்டுநர் பாய் சோன் வின் மங் (28) பலத்த காயங்களுடன் இறந்தார்.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங், "சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராக  நடைபெறும்  உடல், வாய்மொழி அல்லது உளவியல் ரீதியாக நடைபெறும் வன்முறைகளை கண்டித்துள்ளார். மேலும் கொரோனா எதிர்ப்புப் போரில், எங்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற சுகாதாரப் பணியாளர்கள் தங்களது சிறந்த பங்களிப்பைத் செய்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் வருந்தத்தக்கதாகும் எனக் கூறியுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் இந்தத் தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா.செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.