tamilnadu

img

லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கக்கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச.16- சட்ட விரோத லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கக்கோரி வாலி பர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் வட்டம், கல்லங்காட்டு வலசு பகுதியில் சட்ட விரோதமான முறையில் பல இடங்களில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வரு கிறது. மேலும் 24 மணி நேரமும் இப்பகுதியில் மது விற்பனையும், கஞ்சா விற்பனையும் நடைபெற்று வருகிறது. இந்த சமூக விரோத நடவ டிக்கைகளின் காரணமாக இளை ஞர்கள், உழைப்பாளிகள், அப்பாவி பொதுமக்களின் வாழ்கை சூறையா டப்பட்டு தற்கொலைக்கு  தள்ளப்ப டுகின்றனர். ‌எனவே, சட்டவிரோத லாட்டரி விற்பனை, மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரிலான கந்துவட்டி, மது பான கடைகள், கஞ்சா விற்பனை ஆகியவற்றை தடுத்திட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் கல்லங்காட்டுவலசு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கல்லங்காட்டுவலசு ஒன்றிய செய லாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்ட தலைவர் இ.கோவிந்தராஜ், விவ சாய சங்க மாவட்ட செயலாளர்  பெரு மாள், பஞ்சாலை சங்க மாவட்ட தலைவர் பி.சண்முகம், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் எம்.செந்தில் குமார் மற்றும் தனேந்திரன், கோவிந் தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.