tamilnadu

கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

பள்ளிபாளையம் ஒன்றியம், கல்லாங்காடுவலசு கிராமத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டும், பள்ளிபாளையம் ஒன்றியம், கல்லாங்காடுவலசு கிராமத்தில் 50 விசைத்தறி துண்டு நெசவு தொழிலாளர்களுக்கு கடந்த ஆறு வருடங்களாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, கடந்த 18 ஆம் தேதி முதல் 50 விசைத்தறி கூடங்களில் சேர்ந்த தொழிலாளர்கள் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக பேசி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சந்தித்து சிஐடியு விசைத்தறி தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தானர். ஆனால், எவ்வித பேச்சுவார்த்தையும் அரசு நிர்வாகமும், விசைத்தறி உரிமையாளர்களும் கோரிக்கைகளை பேசி தீர்வு காணவில்லை. இந்நிலையில் 60க்கும்மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என்று விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எஸ்.தனபால் வலியுறுத்தியுள்ளார்.