நாமக்கல், மே 8-குமாரபாளையம் வட்டார விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டாரத்தில் விசைத்தறி தொழில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு உரிய கூலி உயர்வு வழங்க வேண்டும். விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி மற்றும் பண்டிகை காலவிடுமுறைகள் உள்ளிட்ட சட்டச் சலுகைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் குமாரபாளையம் வட்டாட்சியர் தலைமையில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.இந்நிலையில் புதனன்று திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியர் மணிராஜா தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் குமாரபாளையம் வட்டாட்சியர் எம்.தங்கமணி, காவல் ஆய்வாளர் தேவி, தொழிலாளர் துறை அலுவலர் மாதேஸ்வரன் மற்றும்சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோகன், மாவட்டத் தலைவர் கே.மோகன், மாவட்ட பொருளாளர் கே.பாலுசாமி, குமாரபாளையம் நகர பொருளாளர் பி. என்.வெங்கடேசன், உதவி செயலாளர் ஜெ.எல்.சரவணன், ஏஐடியுசி குமாரபாளையம் நகர தலைவர் பாலசுப்பிரமணியன், நடராஜன், அடப்புதறி நெசவாளர் சங்க தலைவர் சேகர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இதில் உரிமையாளர்கள் 10சதவிகிதத்துக்கு மேல் கூலி உயர்வுதர முடியாது என தெரிவித்தனர். ஆனால், தொழிற்சங்க தரப்பில்குறைந்தபட்சம் 20 சதவிகிதம்கூலி உயர்வு வழங்குமாறு வலியுறுத்தினார். ஆனால், இதனை ஏற்க உரிமையாளர் சங்கத்தினர் மறுத்து விட்டனர். இதனால்உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதையடுத்து, தொடர்ந்துவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தொழிற்சங்கத்தினர்அறிவித்துள்ளனர். இதனால் குமாரபாளையம் பகுதியில்நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டதொழிலாளர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.