நாமக்கல், செப். 9- தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட் டத்தில் முழுமையாக வேலை வழங்கக் கோரி நருவளுர் ஊராட்சி பகுதி மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர் நாமக்கல் மாவட்டம், நருவளூர் ஊராட்சியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தொட்டிபாளையம் கிராமத்தில் 400க்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் வேலை அட்டை பெற்றுள்ளனர். இவர்க ளுக்கு வாரத்தில் 40 நபர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதால் 300க்கும் மேற்பட் டோருக்கு வேலை கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணை யாளரிடம் முறையிட்டும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதி மக்கள் திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். இதுகுறித்த தகவலறிந்த நாமக்கல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், ஆட்சியர் அலுவலகம் வந்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை தருவதாக உறுதி கூறியதையடுத்து தொழிலாளர் கலைந்து சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.