கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள நல்லாளகுப்பம் கிராமத்தில் 100 நாள் வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாக உடனடியாக அங்கு ஏரி வேலை வழங்கப்பட்டு சமூக இடைவெளியுடன் பயனாளிகள் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு முகக் கவசம் இல்லாத நிலையில் மீண்டும் சங்க நிர்வாகிகளின் தலையீட்டின் பேரில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மூலம் உடனடியாக முகக் கவசம் வழங்க உத்தரவிட்டார்.