நாமக்கல், ஜூலை 29- குமாரபாளையம் வட் டம், ராஜாஜிகுப்பம் பகுதி மக்கள் இலவச வீட்டு மனை கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், ராஜாஜிகுப்பம் பகுதியில் கடந்த 75 ஆண்டுகளாக ஆதிதிராவிட சமுதாயத் தைச் சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் இலவச வீட்டு மனை யும் பட்டாவும் வழங்க வேண்டுமென்று தொடர்ந்து குமாரபாளை யம் வட்டாட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் திங்களன்று அப்பகுதி மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர்.