tamilnadu

img

வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு

தருமபுரி, ஜூன் 19- நீண்ட ஆண்டுகாலமாக குடியிருக் கும் வீடுகளுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி பைசுஅள்ளி பள்ளத்துக்கொட்டாய் கிராம மக்கள் தரு மபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி யிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்துக்குட்பட்ட பைசுஅள்ளி பள்ளத்துக்கொட்டாய் கிராமம் உள்ளது. இங்கு நீண்ட ஆண்டுகாலமாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி அப்பகுதி மக்கள் குடியிருந்து வருகின்ற னர். இவர்கள் அனைவரும் நிலமற்ற ஏழைகள். தினமும் கூலிவேலை செய்து  வாழ்க்கை நடத்துகின்றனர். இந்நிலையில் அரசுக்குச் சொந்தமான இடம் அனுபவம் செய்துவரும் வீட்டை காலிசெய்துவிட்டு வேறு இடத்துக்கு செல்லவேண்டும் என காரியமங்கலம் வட்டாட்சியர் மூலம் குடியிருப்போருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் காலி செய்ய கோரி அதிகாரிகள் அம்மக்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரு கின்றனர். எனவே, நீண்ட ஆண்டுகாலம் குடியி ருக்கும் இம்மக்களை காலிசெய்யும் முயற்சியைக் கைவிட்டு குடியிருக்கும் இடத்துக்கு மனைப்பட்டா வழங்க வேண் டும் என வலியுறுத்தி திங்களன்று அப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.