tamilnadu

வெளியூரிலிருந்து வந்தவர்கள் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்

நாமக்கல், ஜூன் 5 - வெளி நாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங் களிலிருந்து வருகை தரும் நபர்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டுமென நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ள தாவது, நாமக்கல் மாவட்டத்தில் 14 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் வருகை தரும் நபர்கள் விசாரணையின் அடிப்படையில் அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அமைக்கப் பட்டுள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றுப் பரிசோ தனை செய்யப்பட்டு, அதனடிப்படையில் 7 நாட்க ளுக்குப் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.      இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் அமைக் கப்பட்டுள்ள 14 சோதனை சாவடிகளின் வழியாக வரா மல், சோதனைசாவடிகளுக்கு முன் உள்ள சிறிய சாலை கள் வழியாகவோ, பிற பகுதிகள் வழியாகவோ மாவட் டத்திற்குள் ஒரு சிலர் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றை தடுக்க எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளால் பாதிப்பு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.

இந்நிலையில், நோய்த் தொற்றினால் பாதிப்பிக்குள்ளான பிற இடங்களில் இருந்து வரும் நபர்கள் குறித்து முழுமையாக கண்காணிக்க வேண் டியுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் கொரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளி நாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபர்கள் குறித்த விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.