tamilnadu

img

அ.கணேசமூர்த்திக்கு வாக்கு கேட்டு மாதர் சங்கம், வாலிபர் சங்கம், விவசாயிகள் சங்கம் பிரச்சாரம்

குமாரபாளையம், ஏப்.15-குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் மாதர் சங்கம், வாலிபர் சங்கம், விவசாயிகள் சங்கத்தினர் அ.கணேசமூர்த்திக்கு உதயசூரியன் வாக்கு அளிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்திக்கு வாக்கு கேட்டு வீடு, வீடாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் மாதர் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் அலமேலு, ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து இருசக்கர வாகனம் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த வாகனப் பிரச்சாரம் வெப்படை நால்ரோடு, என்சிகாலனி, பாரதிநகர், எம்ஜிஆர் நகர், அண்ணாநகர், பாதரை நெட்ட வேலம்பாளையம், நல்லாகவுண்டம்பாளையம், உத்தமபாளையம், தண்ணீர்ப்பந்தல் பாளையம், மோடமங்கலம், அம்மன் கோவில், ஐசிஎல் மெயின் கேட், பச்சாபாளையம், ஆயி கவுண்டம்பாளையம், பள்ளபாளையம், மேட்டுப்பாளையம், கலாங்காட்டுவலசு, கோட்டைமேடு, ராஜபாளையம், குலத்காடு, எதிர் மேடு, தட்ங்காடு உள்ளிட்ட பகுதிகளில் அ.கணேசமூர்த்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டன.இந்த இருசக்கர வாகன பிரச்சாரத்தினை திமுக ஒன்றிய அவைத் தலைவர் நடேசன் துவக்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் கண்ணன், பொருளாளர் மணிகண்டன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய தலைவர் ராமசாமி, செயலாளர் தனேந்திரன், பஞ்சாலை சங்க மாநில துணை பொதுச் செயலாளர் தனபால், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.