100 நாள் வேலை வழங்க வேண்டும், விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட ஊத்தங்கரை வட்டம், சிங்காரப்பேட்டை, அனுமன் தீர்த்தம் பகுதிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலார்கள் சங்கம் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி, நிர்வாகிகள் எத்திராஜ், அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.