நாமக்கல், ஜன. 22- நாமக்கல் அருகே டி.கே.ரங்கரா ஜன் எம்.பி., நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக் கல் நாட்டு விழா புதனன்று நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையத் தில் அரசு துவக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு கூடு தல் வகுப்பறை கட்டிடம் கட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பொது நிதியிலிருந்து ரூ.15.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதைத்தொடர்ந்து கூடு தல் வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்வானது வடகரைத்தூர் ஊராட்சி மன்ற தலை வர் மஞ்சுளா தலைமையில் நடை பெற்றது. நாராயணசாமி வரவேற்பு ரையாற்றினார். பி.சக்திவேல், டி. திருவேங்கடம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில், கபிலர்மலை வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற் றும் பள்ளி தலைமை ஆசிரியர் லதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தங்கமணி, வட்டச் செயலாளர் கே.சண்முகம், எஸ்.கே. பொன்னம்பலம், கே.கிருஷ்ணன். ஏ.கே.சந்திரசேகரன், கே.எஸ்.இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.