tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கையெழுத்து இயக்கம்

நாகப்பட்டினம், ஆக.1- மத்திய அரசின் புதிய கல்வி வரை வுக் கொள்கையை எதிர்த்தும் அத னைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. செவ்வாய்க் கிழமை கட்சியின் நாகை ஒன்றியம் மற்றும் நாகை நகரம் சார்பில் நாகூரி லும் நாகைப் பகுதிகளிலும் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது. நாகூ ரில் நடைபெற்ற கையெழுத்து இயக் கத்திற்கு நகரச் செயலாளர் எம்.பெரி யசாமி தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன் னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து விளக்கவுரையாற்றிக் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி. மணி, மாவட்டத் தலைவர் பி.ஜீவா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ் சந்திர போஸ், நாகைத் தொழிற்சங்கக் கூட்ட மைப்பின் தலைவர் சு.சிவகுமார், அதன் பொதுச் செயலாளர் சு.மணி, பி.செல்வ ராஜ், பி.முனியாண்டி, எஸ்.விஜய குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கீழ்வேளூர் ஒன்றியம், தேவூர் கடைத்தெருவில் நடைபெற்ற கையெ ழுத்து இயக்கத்திற்கு ஆர்.கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகை மாலி விளக்கவுரையாற்றிக் கையெ ழுத்தைத் துவக்கி வைத்தார். கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி. ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எம்.என்.அம்பிகாபதி, என்.எம். அபுபக்கர், எம்.செல்வராஜ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சிவகுமார், தமுஎகச ஒன்றியச் செயலாளர் எஸ். மோகன்இங்கர்சால், எஸ்.பாண்டியன், ஆர்.முத்தையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.