tamilnadu

img

பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது!

பெருங்கொடுமைக்கு  நீதி கிடைத்துள்ளது!

முதலமைச்சர் மகிழ்ச்சி

சென்னை, மே 13 - நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி  பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி  நந்தினி தேவி தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வரு கின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப் பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மனமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்” என பதிவிட்டுள்ளார்.

இன்று ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம்!

புதுதில்லி, மே 13 - இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தில்லியில் புதனன்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் விவகாரத்தில் அமெரிக்கத் தலையீடு குறித்தும், பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் இன்னும் கைதுசெய்யப்படாதநிலையில் அதுகுறித்தும் நாடாளு மன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலி யுறுத்தி வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.