districts

img

புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் மாணவர் சங்க விழுப்புரம் மாவட்ட மாநாடு தீர்மானம்

விழுப்புரம், ஆக. 1- புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என மாணவர் சங்க மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட 16ஆவது, மாநாடு மாவட்டத் தலைவர் எம்.ஹரிஷ் தலைமையில் நடை பெற்றது, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.சுமித்ரா மாநாட்டில் சங்க கொடியை ஏற்றினார். மாநில துணைச்செய லாளர் எம்.தமிழ்பாரதி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன், மாநில துணைச்செயலாளர் எஸ்.குமரவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்,
தீர்மானங்கள்
புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும், மத்திய பல்கலைக்கழக கியூட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பள்ளி கல்லூரி களில் உள்ள ஆசிரியர், பணி யாளர்கள் காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக டி.சஞ்சய், செயலாளராக ஏ. ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 19 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.