புதுக்கோட்டை, நவ.4 - 19 ஆண்டுகளாக ஆசிரியர், அரசு ஊழியர் களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ள தன் பங்கேற்பே ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளபடி, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வி யைப் பாதிக்கும் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். 50 ஆண்டுகளாகப் பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்க உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் வலி யுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வெள்ளிக்கிழமை தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற தர்ணாவிற்கு ஆரம்பப் பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் சி.சோம சுந்தரம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் த.ஜீவன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சே.பேச்சியம் மாள், பொதுக்குழு உறுப்பினர்கள் பழ.தேவேந் திரன், த.ரமேஷ் மற்றும் மாவட்டப் பொறுப்பா ளர்கள் பேசினர். தோழமைச் சங்கத்தினர் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் நிறைவுரை யாற்றினார். மாவட்டப் பொருளாளர் வே.கீதா நன்றி கூறினார். கரூர் கூட்டணியின் மாபெரும் தர்ணா போராட் டம், கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குளித்தலை கல்வி மாவட்ட தலைவர் க.ஜான்சன் தலைமை வகித் தார். கரூர் கல்வி மாவட்ட செயலாளர் ஆ.பிரான்சிஸ் டேனியல் ராஜா வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ச.வின்சென்ட், அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஞானத்தம்பி, மாவட்ட செயலாளர் கே.சக்தி வேல், மாவட்ட தலைவர் எம்.சுப்பிரமணியன், ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டச் செய லாளர் ஜ.ஜெயராஜ் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். மாவட்ட பொருளாளர் ஆ.தமிழரசி நன்றி கூறினார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிரில் நடை பெற்ற போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் மா. கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் க.மதியழகன் வரவேற் றார். மாநிலச் செயலாளர் கோ.வீரமணி கோரிக் கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். மாவட்டப் பொருளாளர் திலகம் நன்றி கூறினார்.