tamilnadu

img

நாடாளுமன்ற சிறப்பு அமர்வைக் கூட்டுக!

நாடாளுமன்ற சிறப்பு அமர்வைக் கூட்டுக!

அமெ. தலையீடு குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்

பிரதமர் மோடிக்கு  எம்.ஏ. பேபி கடிதம்

புதுதில்லி, மே 13 -  போர் நிறுத்தம் மற் றும் நாட்டில் முன்னு க்கு வந்துள்ள பல் வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்து, முடிவெடுப்பதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி  யுள்ளது. இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு விடை கிடைக்கவில்லை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையி லான போர் நிறுத்த அறிவிப்பு தொடர்பான சமீபத்திய நிகழ்ச்சிப் போக்குகளின் அடிப்படை யில் இந்தக் கடிதத்தை தங்களுக்கு நான் எழுதுகிறேன்.போர் நிறுத்த அறிவிப்பு நமது நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும், அமைதியை விரும்பும் சர்வதேச சமூகத்திற்கும் நிம்மதியை அளித்துள்ள அதே சமயத்தில், பல பிரச்சனைகள், குறிப்பாக ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக எழுந்த கேள்விகள் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன. மக்களின் ஒற்றுமையை  குலைத்த தீய சக்திகள் ஏப்ரல் 22 அன்று அப்பாவி சுற்றுலாப் பயணி கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், நாட்டின் மனச்சாட்சியை ஆழமாக உலுக்கி யுள்ளன. இருப்பினும், நாட்டுமக்கள் சக்தி வாய்ந்த அபரிமிதமான ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள். இந்த ஒற்றுமையைப் பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு   பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதர வாளர்களையும் தனிமைப்படுத்தியிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நாட்டு மக்களிடையே மகத்தான ஒற்றுமை ஏற்பட்டுள்ள இந்தத்  தரு ணத்தில், சில ஊடகங்களும் மற்றும் சில சமூக ஊடகங்களும் தவறான தகவல்களைப் பரப்பி, மக்கள் மத்தியில் விளைந்துள்ள ஒற்றுமை  உணர்ச்சியைத் தகர்க்க முயற்சித்து வருகின்றன. இவற்றில் பரப்பப்படும் தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் தலையீடு  கவலை அளிக்கக் கூடியது இந்த நேரத்தில், நம் அரசின் பிரதிநிதிகளி டமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறி விப்பும் வெளியிடப்படுவதற்கு முன்பே, அமெரிக்க ஜனாதிபதியின் போர் நிறுத்த அறிவிப்பு, ஆழமான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.  நம் பிரச்சனைகளை இருதரப்பும் பரஸ்பரம் பேசித் தீர்த்துக்கொள்வது என்பதே இதுவரை நம் நாட்டின் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையாக இருந்து வந்திருக் கிறது. ஆனால், இப்போது கூடுதலாக அமெரிக்க ஜனாதிபதி போர் நிறுத்த அறிவிப்பை வெளி யிட்டிருப்பது தொடர்பாக நம் அரசாங்கத்தின் உயர் மட்டங்களிலிருந்து தெளிவான மற்றும் அதிகாரப்பூர்வமான தெளிவுபடுத்துதல் தேவைப்படுகிறது. இந்தப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே கோரி யபடி, நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வைக் கூட்டி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதில் பிரதமராகிய தாங்கள் தங்களின் தனிப்பட்ட பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமருக்கு எம்.ஏ.பேபி கடிதம் எழுதியுள்ளார்.